Monday, 2 June 2008

நிலாப் பார்த்தல்!

இரவு நேரங்களில், உன் கை பிடித்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முழு நிலவு அன்றும், பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தப் பொழுது, திடீரென்று கேமிராவை எடுத்துக் கொண்டு வா என்று கத்தினேன். நீ ஒன்றும் புரியாமல் விழித்து என்னைப் பார்த்தாய். வானத்தில் அதிசயம் நடக்கிறது, உடனடியாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினேன். நீ என்ன என்ன என்று கேட்டாய். அதோப் பார், உனக்கு தெரியவில்லையா என்றுக் சொன்னேன். நீ இல்லை என்று உதட்டை சுழித்தாய். அடி கிறுக்கி இன்று இரண்டு நிலா இருக்கிறது என்றேன். ஒரு நிமிடம் என்னைப் பார்த்து வெட்கப்பட்ட நீ, மறு நொடியே கோபமானாய். இன்று மட்டுமே இரண்டு நிலா இருக்கிறதா, இது வரை நான் நிலாப் போல் இல்லையா என்றாய். அடி என் முட்டாள் காதலியே, இன்று வரை நீ மட்டுமே இருந்தாய், இன்று முழு நிலவு அல்லவா, அதனால் உன்னுடன் போட்டியிட வான் நிலவு முயற்ச்சித்து தோற்று வெட்கி சிவந்திருக்கிறது என்றேன். இரு நிலவும் சிவந்தது!

No comments: