இனிமையானதொரு விடி காலை பொழுது அது. சாலையெங்கும், பெயர் தெரியாத, வாசனையான மஞ்சள் பூக்களை செரிந்திருந்த, மரத்தினடியில் அமர்ந்திருந்தேன். தொட்டு தழுவி செல்லும் தென்றலைப் போன்றதொரு அழகுடன், அவள் நடந்து வந்து, சாலையின் எதிர்ப்பக்கம் நின்றாள். என் அருகில் வருமாறு அழைத்தேன். கீழே இருந்த பூக்களைக் காட்டி, "மிதிக்க மனசு வரல" என்றாள். என்ன சொல்லி இவளுக்கு புரிய வைப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கையில், மரத்திலிருந்து விடுவித்து கொண்ட பூவொன்று மெதுவாக மிதந்து வந்து, மற்ற பூக்களுடன் கலந்தது. மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்து, "பூ விழுந்து பூவுக்கு வலிக்காது" என்றேன். பூ, சின்னதொரு புன்னகையுடன், சாலையை கடக்க ஆரம்பித்தது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment