Thursday, 8 May 2008

இனிக்கும் மழை!

மழைப் பெய்யும் பின் மாலை பொழுதில், கையில் தேநீருடன் பால்கனியில் அமர்ந்திருக்கையில் அவள் வந்தாள். அவள் கையிலும் தேநீர். சிறு குழந்தையை போல், மழையை வேடிக்கை பார்த்தவள், கையை வெளியில் நீட்டி மழைத்துளிகளை சேகரித்து, தேநீருடன் கலந்துக் குடித்தாள். பின் என்னைப் பார்த்து, மழை எப்படி இருக்கிறது என்று கேட்டாள், 'உனக்கு தெரியாதா' என்று நான் கேட்டேன். சிறிது நேரம் என்னைப் பார்த்திருந்தவள், மெதுவாக, 'மழை எனக்கு எப்படி இருக்கும்னு தெரியும், ஆனா உனக்கு எப்படி இருக்குன்னு தெரியாதுல்லா' என்றாள். உண்மைதானே, ஒரே மழை, ஒவ்வொருத்தர்க்கும், ஒவ்வொரு ருசியை தருகிறது. 'எனக்கு மழை உன்னை மாதிரி! அன்பான தோழி, காதலி' என்றேன். ஒன்றும் சொல்லாமல், மழையுடன் சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்தவள், திடீரென்று, 'எனக்கு மழை உன்னை மாதிரி, திமிர் பிடிச்ச ராட்சஷன்' என்று என்னை கிள்ளி விட்டு ஒடி விட்டாள். மழை இனிக்க இனிக்க பெய்து கொண்டிருந்தது.

No comments: