மிக நாட்களாக, எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்கள் என்று சொல்பவர்கள் அனைவரும், ஹிந்து எதிர்ப்பு கொள்கையை மட்டுமே கொண்டிருக்கின்றனரா என்று! எனக்கு தெரிந்து அனைத்து மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. மூட பழக்கங்கள் உள்ளன. ஹிந்து கடவுள் சிலைகளை அவமதிப்பு செய்பவர்கள், ஏன் தேவாலயத்துக்கோ இல்லை, மசூதிக்கோ சென்று இதை செய்ய கூடாது. தன் கட்சிக்காரர் தீ மிதித்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் கலைஞர் அவர்கள், இஃப்தார் கஞ்சி குடிக்கிறார். மத நல்லிணக்கம் என்று எடுத்துக் கொண்டால், அப்பொழுது, ஹிந்துக்களுடன் நல்லிணக்கம் வேண்டாமா? சரி நாம் ஹிந்துக்கள் இல்லை, அது பார்ப்பனிய பயங்கரவாத கொள்கை என்று எடுத்துக் கொள்வோம். அப்படியென்றால், கிறித்துவம், ஆங்கிலேயர்களின் பயங்கரவாத கொள்கை, இஸ்லாம் அரேபியர்களின் பயங்கரவாத கொள்கைதானே. சிலர் ஹிந்துவாக மாறினார்கள், சிலர் கிறித்துவராக, சிலர் இஸ்லாமியராக. ஆனால், ஏன் எப்பொழுதும் ஹிந்துக்களே குறி வைக்கப் படுகின்றனர். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் என் பெற்றோர்களுக்கு உண்டு. இது இங்கு இருக்கும் பல உறுப்பினர்களுக்கு பொருந்தும். அவர்கள் உணர்ச்சிகள் புண்படுத்தப்படலாமா. . நமக்கு நம்பிக்கை இல்லாவிடினும், பிறரின் நம்பிக்கையை ஏன் கேவலப்படுத்த வேண்டும். கடவுளை மறுத்தால், அவமதிப்பது என்று முடிவு செய்தால், எல்லா கடவுள்களையும் செய்வோம். இதிலேயாவது சமத்துவம் இருக்கட்டும்.
ஒரு விளக்கம்: நான் கடவுள் மறுப்பு கொள்கையாளன். சில அரைவேக்காடுகளைப் போல் அல்லாமல், அனைத்து மதங்களையும் அன்போடு எதிர்ப்பவன். பிறர் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பவன்.அனைத்து மனிதர்களையும் நேசிப்பவன்.
Thursday, 8 May 2008
ஒரு சந்தேகம்!
Labels:
எனது சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment