Saturday, 9 February 2008

பயம்!

எதிர்காலம் பற்றிய பயம் மிக மெதுவாக, இருள் படர்வது போல், நாகம் ஊர்வது போல், நம்மை சுற்றிக் கொண்டே இருக்கின்றது. ஒரு மெல்லிய புகை படலமாய், நீருக்குள் அமுக்கப்பட்ட உணர்ச்சியாய், மனதில் கொப்பளிக்கிறது. சொல்லத் தெரியாத சலிப்பு தினமும் காலையில்! ஒவ்வொரு நாளும் மிக சாதரணமாய், ஒரு சுழற்ச்சியாய், பழக்கப்பட்ட குதிரையைப் போல், தன்னால் நகர்ந்து முடிந்து விடுகின்றது. இன்னும் பல வருடங்கள் இப்படியே வாழ வேண்டுமென்று நினைக்கையில், மலைப்பு தட்டி விடுகின்றது. இதில் மரணம் பற்றிய பயம் வேறு, மனதில் கிடுக்கிப்பிடியாய், அழுத்துகிறது. என்ன செய்ய போகிறோம், இன்னும் வாழ வேண்டிய காலமெல்லாம் இப்படித்தானா? மாற்றம் வராதா! மொத்தமாக அனைவரும், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு கற்காலத்திற்கு செல்ல முடியாதா? மழைக் காலங்களில், குடை இல்லாமல், தெருவோரத்தில் ஒதுங்காமல், நனைந்துக் கொண்டே சத்தமாக சிரிக்க முடியாதா?

No comments: