Sunday, 20 April 2008

போர்!

என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனதிற்க்குள் எப்பொழுதும் ஒரு குழப்பம். என்ன செய்ய போகிறோம் என்று தெரியாத ஒரு திகைப்பு. நாட்கள் மிக வேகமாக கடந்து சென்று விட்டன. இன்று வரை வீட்டிற்க்கு நாம் உபயோகமாக இருந்ததில்லை என்பது சட்டென்று முகத்தில் அறைகின்றது. வருங்காலம், இரவை விட கனமானதொரு இருட்டாய் இருகின்றது. மந்திரவாதியின் தொப்பிக்குள் இருந்து அடுத்து என்ன வருமென்பது தெரியாதது போல், நாளைய பொழுதும் மர்மமாகவே இருக்கின்றது. ஒரு சிறு வெளிச்ச துண்டு கிடைத்தால் கூட அதை பிடிதுதுக் கொண்டு இருளை கடந்து விடலாம். ஆனால், இருக்கின்ற ஒரு சிறு நெருப்பு துணுக்கை நோக்கி நடப்பதற்க்குள், நமக்கு முன், அங்கே, நூறு, ஆயிரம், நூறாயிரம் பேர், அந்த சிறு துண்டுக்கு போராடிக் கொண்டிருப்பது தெரிகின்றது. ஒருவர் மேலொருவர் ஏறி, அடித்துக் கொண்டு, இரத்தம் சிந்தி, மிக கொடுரமாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் கொன்று, பிணங்களை குவித்து அதன் மேலேறி வெளிச்சத்திற்க்கு அருகில் போய் கொண்டிருக்கின்றனர். நான் நடந்து போகும் வழியெல்லாம் கைகள், கால்கள், தலைகள், முண்டங்கள். துண்டான தலை ஒன்று, என்னைப் பார்த்து, பீடிக்கு நெருப்பு கேட்கிறது. அந்த நேரத்திலும் சிரிக்கின்றேன், இருக்கும் சிறு நெருப்பை பீடிக்கு குடுத்து விட்டால், இருட்டை எப்படி கடப்பது. அதோ பிணக்குவியலை நெருங்கி விட்டேன். என் முறை வந்து விட்டது. இனி நான் கொல்வேன். கொன்று மேலேறுவேன். என்ன செய்ய, கொல்லாவிட்டால், கொல்லப்படுவேன். எனக்கு படியாகவும் விருப்பமில்லை, உயிர் விடும் ஆசையுமில்லை!

No comments: