இப்பொழுதெல்லாம், நம்மில் பலர்க்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிவதில்லை என்றே தோன்றுகிறது. நமக்காக வாழ்வது என்பதே அரிதாகி விட்டது. எதற்க்காக நான் வேலைக்கு போக வேண்டும். உண்ண, உடுத்த மட்டுமே என்றால், நான் காட்டில் சென்று குடிசை அமைத்துக் கொண்டு, பழங்களையும், மிருகங்களை வேட்டையாடிக் கொண்டும் இருந்து விடலாமே. வேறு எதற்க்கு? இந்த சமுகத்தில் ஒரு அடையாளத்துக்காகவா? ஏன் என் அடையாளம் என் வேலையாக மாறி விட்டது? எனக்கென்று ஒரு தனித்துவம் இல்லையா, எல்லோரும் கணிணி, எல்லோரும் மருத்துவம். அப்பொழுது நான் யார்? கூட்டத்தில் ஒருவனா? பத்தோடு பதினொன்றா! சரி, வசதிக்களுக்காக என்றால், என்ன வசதி? பெரிய வீடு, முன்னால் ஒரு புதிய வாகனம், இதுகளா? ஏன் நான் நடந்து போகக் கூடாது? ஏன் எனக்கு ஒரு சின்ன இடம் போதாது? தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு நான் ஏன் போக வேண்டும். என் குடும்பம், என் மக்கள், என எல்லோரும் ஒரு இடத்தில் இருக்க விடாமல் தூரத்தில் தள்ளி விட்டது, இந்த சமுக அமைப்புத்தானே. என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான வட்டம் இது. சம்பாதிக்க சொந்தங்களை விட்டு தூர போய், சம்பாதித்ததை செலவழித்து வந்து, சொந்தங்களை பார்த்து, இதற்க்கு இங்கேயெ இருந்து விடலாமே. யோசித்து பார்த்தால், நாம் அனைவரும், சமுகம் எனப்படுகின்ற இந்த அமைப்புக்கு பயந்தே மனதிற்க்கு ஒட்டாததை செய்வது புரிகின்றது. ஆனால் சமுகம் என்பது, நீங்களும் நானுமே. மாறுவோம். நமக்காக வாழ ஆரம்பிப்போம்!
Saturday, 2 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment