Wednesday, 23 January 2008

சக்கரம்!

வாழ்க்கை மிகவும் சலிப்பளிப்பதாக உள்ளது. சற்றும் மாறாத, ஒரே மாதிரியான ஒரு முடிவில்லாத சக்கரத்தில் சிக்கிக் கொண்டது புரிகின்றது. உண்ண, உடுத்த சம்பாதித்து, சம்பாதிக்க உண்ண, உடுத்தி, எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. எப்பொழுதும் முகமூடிகளை தரித்துக் கொண்டலைவது மி்கக் கடினமாக உள்ளது. நமக்காக வாழ்வதென்பது இல்லாமல், பிறர்க்காக சிரித்து, அழுது எதற்க்காக இதெல்லாம்? நாம் ஏன் குகைகளிலேயே இருந்திருக்க கூடாது? எல்லோரும் ஒடுகிறார்கள் என்பதற்க்காக நாமும் உடன் சேர்ந்து ஒடுவது, முட்டாள்த்தனமாக உள்ளது. நின்று மழையை இரசிப்பது, நிலா பார்ப்பது, மரம் தொடுவது எல்லாமே பைத்தியக்காரத்தனமாகப் பார்க்கப்படுகின்றது. சாறுக்காக சக்கையாக்கப்படும் கரும்புகளை போல, நம்மை நாமே பிழிந்துக் கொள்கின்றோம். கரும்பு சக்கை எறும்புக்காவது உணவாகிறது. ஆனால் நாம்?

No comments: