வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான கணம், நம் காதல் ஏற்று கொள்ளப்படும் நேரமாகத்தான் இருக்க வேண்டும். வயிற்றில் இருந்த பயக் குமிழி உடைந்து, கண்களில் நீர் முட்ட, நடப்பது நிஜம்தானா என்ற அச்சம் நீங்க, சில விநாடிகளாகும். உடனடியாக, ஒடிச் சென்று, நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் வரும். உலகமே மிக சுத்தமாக தோன்றும். அனைத்து உயிரினங்கள் மேலும் அன்பு ஊற்றெடுக்கும். அனைவரும் நம்மையே பார்ப்பது போன்று, ஒரு கூச்சம் சுற்றி கொள்ளும். நடு வீதியில் நின்றுக் ஓவென உரக்கக் கத்த தோன்றும். முடிவு எப்படியாக இருந்தாலும், இந்த கணத்திற்காக, காதல் செய்வீர் நண்பர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment