Monday, 29 October 2007

பொது இடங்களில் காதல் வெளிப்பாடு!

பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவதில் தவறில்லை. முத்தம் கொடுப்பது மட்டுமே காதலை வெளிப்படுத்தும் வழியல்ல என்றாலும், இங்கு காதலர்கள் கை கோர்த்து கொண்டு நடப்பது கூடத்தான் விமர்சிக்கப்படுகிறது. இது உண்மை, எனக்கே இது நடந்துள்ளது. தனி மனித ஒழுக்கம் என்பது இதனால் கெடுகிறது என்றால்,

1.) சுவரில் சிறுநீர் கழிப்பது
2.) குப்பை கொட்டுவது
3.) எச்சில் துப்புவது

இவையெல்லாம் தனி மனித ஒழுக்கத்தை தூக்கி நிறுத்தும் வழிகளா! இதையெல்லாம் விட்டுட்டு, காதலர்கள மட்டும் குறை சொல்லாதிங்க. விசாலமான பார்வை அவசியம். காதலர்கள பாத்து உங்க ஒழுக்கம் குறையுதுன்னா, அது உங்க மன அழுக்கை காட்டுகிறது.

அன்று ஒரு நாள் நான் மதுரை செல்வதற்காக எழும்பூர் நிலையத்தில் காத்து கொண்டு இருந்தேன். அப்பொழுது, அங்கு தனது காதலியை வழியனுப்ப ஒரு காதலன் வந்து இருந்தான். அந்த பெண்ணிண் கண்களில் கண்ணீர். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனக்கு தெரியாது. வண்டி கிளம்பும் நேரம் வந்து விட்டது. அதுவரை பேசி கொண்டு இருந்த அந்த காதலன், திடிரென்று வெகு வேகமாக சென்று ஒரு புத்தகம் வாங்கி கொண்டு வந்து தந்தான். அப்பொழுது, அந்த பெண் அந்த காதலனனின் கைகளை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள். உடனே அந்த காதலன் அந்த பெண்ணை தன் தோள்களில் சாய்த்து கொண்டு ஆறுதல் சொன்னான். இதை அன்பின் வெளிப்பாடு என்றல்லாமல் காமமாக பார்த்தால் அது யார் குற்றம்? இது தவறா? சில நேரங்களில் ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை, ஒரு சிறு கை கோர்த்தல் சொல்லி விடும். புரிந்து கொள்ளுங்கள்!

No comments: