இன்று எனது சகா ஜெனியின் வலை பக்கத்தை பார்க்கும் பொழுது நான் மிக நாட்களாக எண்ணி கொண்டிருந்த ஒரு விசயத்தை எழுத்தில் பார்த்தேன்.அது,
பெண்களின் உடை
இதில் சகாவுடன் எனக்கு முழுமையான் உடன்பாடு உண்டு. பெண்கள் என்ன உடை அணிந்தாலும் மிக நிச்சயமாக ஆண்களால் விமர்சிக்கப்படுவார்கள். இதற்கு காரணம்,
அ.) கட்டைக்கு தாவணி சுற்றி வைத்தால் கூட உரசுவது நம் பாரம்பரியத்தில் ஒன்றாக மாறி விட்டது. இதற்கு முறையான கலவி கல்வி இல்லாததும் ஒரு காரணம். மிக முக்கியமாக, நம் தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் சில திரைபடங்களில் பேசும் வசனங்கள் தடை செய்யப்பட வேண்டும்
உதாரணம் = சிவகாசி திரைபடத்தில் அசினின் உடை பற்றி விஜய் பேசுவது
அஆ படத்தின் அறிமுக காட்சி ( இந்த படத்தின் நாயகன் எஸ்।ஜே.சூர்யா முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய ஒருவர்! He is perverted to the core)
ஆ.) நம் சமுக அமைப்பில், ஒரு சில மாநகரங்களை தவிர, பிற இடங்களில், பெண் என்பவள் ஆணால் அணுக முடியாத ஒரு விசயமாகவே இருப்பது. எப்பொழுது நம் சமுகத்தில், பெண்ணும் ஆணும், தோழர்களாக இருக்க முடியும் என்பது ஏற்று கொள்ளப்படுகிறதோ, அப்பொழுதுதான் இது ஒரு முடிவுக்கு வரும். மறைத்து வைத்தால்தான், திருடும் எண்ணம் வரும்!
எனவே பெண்களின் உடையை குறை சொல்வதை நிறுத்திக் கொள்வோம்!
Thursday, 18 October 2007
பெண்களின் உடை!
Labels:
எனது சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment