Wednesday, 17 October 2007

இட ஒதுக்கீடு!

எனக்கு இட ஒதுக்கீட்டில் உடன்பாடு உண்டு, ஆனால் சாதிய அடிப்படையில் அல்லாமல், பொருளாதார அடிப்பாடையில் இடஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு காரணங்கள்,

1.) இடஒதுக்கீடு என்பதே படிக்க போதிய வசதிகள் இல்லாத மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதுதான். சற்றே சிந்தியுங்கள், வசதி படைத்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவணுக்கு இடம் கிடைப்பதா அல்லது ஒரு ஏழை உயர் சாதி மாணவணுக்கு இடம் கிடைப்பதா, எதற்கு இடஒதுக்கீடு அவசியம்!

2.) பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கிடு இருந்தால், உண்மையான சமத்துவம் பிறக்கும், இல்லையா! இதனால் உண்மையாகாவே வசதி இல்லாத தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கும் பொருளாதார அடிப்படயில் இடஒதுக்கீடு உண்டல்லவா!

No comments: