நொடிகள் கரைகின்றன....
நிமிடங்கள் ஓடி ஒளிகின்றன....
காலங்கள் கண் முன்னே வேகமாக பயணம் செய்கின்றன....
நான் மட்டும்...
நீ விட்டு சென்ற இடத்திலயே சிலையாய் நிற்கிறேன்!
நீ இல்லாமல் வாழ மனம் இல்லாமல் இல்லை......
நீ இல்லாமல் எனக்கு வாழத்தெரியவில்லை....!
காத்திருக்கிறேன்............
உனை....எதிர்பார்த்து....!!!
எழுதியவர் காவ்யா!
Thursday, 12 June 2008
Tuesday, 3 June 2008
கண்ணாமூச்சி!
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நிதானமாக, யோசித்து பார்த்து தான் வைத்தேன்...எப்படி, எப்பொழுது என்னுள் நுழைந்தாய்? நீ என்னுள் நுழைந்த நொடி முதல், எங்கோ தொலைந்த என்னை தேடி அலைகிறேன்! ஒரே ஒரு தரம், என்னை தேடி என்னிடம் சேர்த்துவிடு. ம்ம்ம்..... மறுபடியும் என்னை உன்னில் தொலைத்து விட ஏங்குது என் நெஞ்சம்!
எழுதியவர் காவ்யா!
Monday, 2 June 2008
நிலாப் பார்த்தல்!
இரவு நேரங்களில், உன் கை பிடித்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முழு நிலவு அன்றும், பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தப் பொழுது, திடீரென்று கேமிராவை எடுத்துக் கொண்டு வா என்று கத்தினேன். நீ ஒன்றும் புரியாமல் விழித்து என்னைப் பார்த்தாய். வானத்தில் அதிசயம் நடக்கிறது, உடனடியாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினேன். நீ என்ன என்ன என்று கேட்டாய். அதோப் பார், உனக்கு தெரியவில்லையா என்றுக் சொன்னேன். நீ இல்லை என்று உதட்டை சுழித்தாய். அடி கிறுக்கி இன்று இரண்டு நிலா இருக்கிறது என்றேன். ஒரு நிமிடம் என்னைப் பார்த்து வெட்கப்பட்ட நீ, மறு நொடியே கோபமானாய். இன்று மட்டுமே இரண்டு நிலா இருக்கிறதா, இது வரை நான் நிலாப் போல் இல்லையா என்றாய். அடி என் முட்டாள் காதலியே, இன்று வரை நீ மட்டுமே இருந்தாய், இன்று முழு நிலவு அல்லவா, அதனால் உன்னுடன் போட்டியிட வான் நிலவு முயற்ச்சித்து தோற்று வெட்கி சிவந்திருக்கிறது என்றேன். இரு நிலவும் சிவந்தது!